மொசில்லாவின் திறந்த மூல குரல்தரவுதள முன்னெடுப்பான Common Voice ( voice.mozilla.org/ta) இப்போது தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. இது குரல் கண்டறிதல் தொழில்நுட்பங்களுக்குப் பயிற்சி அளிப்பதற்குத் தேவையான பெருமளவு குரல்மாதிரிகளைக் பொதுக்கள உரிமையில் (CC-0) வெளியிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Common Voice தளத்திற்குச் சென்று சொற்றொடர்களைப் பேசி பதிவுசெய்வதின் மூலமும் பதிவு செய்யப்பட்டவற்றைச் சரிபார்ப்பதன் மூலமும் நீங்கள் பங்களிக்கலாம். இதைப் பற்றிய அரை மணி நேர அறிமுகக் கூட்டம் இணையவழி நடக்கவிருக்கிறது.
நாள்: 26.06.2022 ஞாயிறு – மாலை 5.30 மணி இந்திய நேரம்
ஒருங்கிணைப்பாளர்: கி. முத்துராமலிங்கம், பயிலகம், சென்னை.
நிகழ்வில் பங்கெடுக்க: meet.jit.si/mozilla
wikisource-l@lists.wikimedia.org