நல்லது மணியன். நிகழ்வு சிறப்பாய் அமைய வாழ்த்துகிறேன். இது குறித்து விக்கிமீடியா இந்தியா மடற்குழுவுக்கும் (wikimediaindia-l@lists.wikimedia.org) ஒரு மடலனுப்பினால் மேலும் பலர் கலந்து கொள்ள வாய்ப்பாகும்.
பரிதிமதியோடு இப்போது நீங்களும் சென்னை வந்திருப்பது மகிழ்ச்சி. சிரீகாந்தும் ( Srikanth, hope you don't mind :D) பெங்களூரில் தங்கியிருந்தாலும் சென்னைக்காரர் என்பது கூடுதல் வசதி. தேனியார் சென்னை வருகிறாரா? இல்லையெனில் அவரை வைத்து மதுரையில் கூட்டம் நடத்தலாம். மகிழ்நனுக்கு வாய்ப்பில்லை என்றார்.
- சுந்தர்
"That language is an instrument of human reason, and not merely a medium for the expression of thought, is a truth generally admitted." - George Boole, quoted in Iverson's Turing Award Lecture
From: மணியன் manimalar.blog@gmail.com To: wikita-l@lists.wikimedia.org; ரவிஷங்கர் ravishankar.ayyakkannu@gmail.com; BalaSundaraRaman sundarbecse@yahoo.com; ravisankar swaminathan ravisankar.srs@gmail.com Cc: Srikanth Lakshmanan srik.lak@gmail.com Sent: Thu, December 30, 2010 11:03:56 PM Subject: விக்கிப்பீடியாவின் பத்தாவது ஆண்டு நிறைவு - சென்னையில் 15 சனவரியில் விக்கிசந்திப்பு
விக்கிப்பீடியாவின் பத்தாவது ஆண்டுநிறைவினை யொட்டி சென்னையில் தமிழ் புத்தாண்டு தினமான 15/1/2011 அல்லது அடுத்த நாள் ஓர் விக்கி சந்திப்பு/பட்டறை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
[1] http://ten.wikipedia.org/wiki/Chennai
ஸ்ரீகாந்த் இதற்கான இடம் மற்றும் பிற ஏற்பாடுகளை செய்து வருகிறார். இது குறித்த உங்கள் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் எதிர்நோக்குகிறேன்.
அன்புடன், மணியன்