வணக்கம், செப்டம்பர் 17 ஆம் நாள் "விக்கி மாரத்தான் பயிலரங்கு" சென்னை குரோம்பேட்டையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெறுகிறது. ஆர்வமுள்ளவர்கள் விக்கி மாரத்தான் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_2022 திட்டத்தில் பதிவுசெய்யலாம். முன்பதிவு செய்யாதவர்கள் இப்படிவத்தில் https://docs.google.com/forms/d/e/1FAIpQLScKd5wOzoxhCT-ERc2XKE6fGk2QVaKVK4VRXBEoNznz4E5g-Q/viewform?usp=sf_link முன்பதிவு செய்து நேரடிச் சந்திப்பிலும் கலந்து கொள்ளலாம்.
அன்புடன், நீச்சல்காரன்
On Sat, 27 Aug 2022 at 09:42, நீச்சல் காரன் neechalkaran@gmail.com wrote:
வணக்கம், செப்டம்பர் 25 ஆம் நாள் விக்கி மாரத்தான் https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_2022 நிகழ்வு தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழ்கிறது. விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுவதும், பல்வேறு நாடுகளில் வாழும் அனைத்து விக்கிப் பயனர்களும் உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் நிகழ்வாகும்.
இம்முறை துப்புரவு செய்யவும் உள்ள கட்டுரைகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னையில் ஒரு சந்திப்பினை செப்டம்பர் 17 அல்லது 18 இல் ஒருநாள் நடத்த திட்டமிடுகிறோம். ஆர்வமுள்ள பங்கேற்பாளர்களின் அடிப்படையில் நிகழ்விடத்தை உறுதி செய்யவுள்ளோம். ஆலமரத்தடியிலும் உரையாடல் செய்யலாம்.
பெருந்தொற்றுக்குப் பிறகான நேரடிச் சந்திப்பாகவும் இது அமைவதால் வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறோம். உங்கள் விருப்பத்தை இப்படிவத்தில் https://docs.google.com/forms/d/e/1FAIpQLScKd5wOzoxhCT-ERc2XKE6fGk2QVaKVK4VRXBEoNznz4E5g-Q/viewform?usp=sf_linkகொடுத்தால் திட்டமிட ஏதுவாக அமையும்.
-- அன்புடன், நீச்சல்காரன்