வணக்கம், தமிழின் முக்கிய சொற்களஞ்சியமான சொற்குவைத் தளத்தின் சொற்களின் ஒரு பகுதி சுமார் 4.4 லட்சம் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தற்போது தமிழ் விக்சனரிக்குக் கொடையாக அளித்துள்ளனர். இவை விரைவில் விக்சனரியில் ஏற்றப்படவுள்ளது. https://sorkuvai.com/disclaimer/wordsforwiktionary/
சில மாதங்களுக்கு முன்னர் சொற்குவைத் தளம் பொதுவுரிமையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத் தக்கது. தமிழ் விக்சனரி உட்பட பல்வேறு தரவகங்களுக்கு இச்சொற்களை இனி நாம் எளிதில் கொண்டு சேர்க்கலாம். தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் அகரமுதலித் திட்ட இயக்கத்திற்கும் நன்றி.