பைந்தமிழ் (PyTamil) என்பது ஒரு பைதான் நிரலாக்கப் பொதி. இதன் மூலம் தமிழ் எழுத்துகளை பைதான் மொழியில் எளிதில் கையாளலாம். Open-Tamil தொகுப்பு போல இதுவும் கட்டற்ற மென்பொருளாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் வார்த்தைகளை சேர்த்து எழுதுதல், பிரித்து எழுதுதல், மாத்திரை அளவிடல், குறள், வெண்பா - யாப்பு ஆராய்தல் ஆகியவற்றை செய்யலாம்.
காண்க - https://srix.github.io/pytamil/
மூலநிரல் - https://github.com/srix/pytamil
அதன் உருவாக்குனர் திரு. ஶ்ரீராம் neosrix@gmail.com (பெங்களூர்) இன்று பைந்தமிழ் பற்றிய நேரடி நிரலாக்க நிகழ்வு, இணைய வழியில் நடத்திக் காட்ட உள்ளார்.
நாள் - பிப்ரவரி 13 2021
நேரம் - பிற்பகல் 3-4 (இன்று, இன்னும் சில மணி நேரங்களில்)
இணைப்பு - https://www.twitch.tv/neosrix
பொருளடக்கம் ;
3.00 - Intro to Pytamil (பைந்தமிழ்) project 3.10 - How to analyse Venba (வெண்பா) 3.20 - How to analyse Maathirai (மாத்திரை) 3.30 - Design choices . Why Python, ANTLR4 grammar is used 3.40 - Q&A 3.50 - What's next 4.00 - Checkout
மேற்கண்ட இணைப்பில் இணைந்து, பைந்தமிழைக் காணுமாறு அனைவரையும் வேண்டுகிறோம்.
பைந்தமிழ் நிரலுக்கும் நிகழ்வுக்கும் ஶ்ரீராம் அவர்களுக்கு நன்றிகள்.
-- Regards, T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer : http://FreeTamilEbooks.com
tawikisource@lists.wikimedia.org