Congrats!!
You are a gifted one !
எனது பிறந்தநாளான நேற்று, என் மனைவி நித்யா தந்ந அன்புப் பரிசு ஒரு
சந்திப்பிழைத் திருத்தி!
இதோ அவரது வார்த்தைகளில்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சீனிவாசன்! நலமுடன் நீடூடி வாழ்க!! இதோ எனது பரிசு!!!
திருமணமான நாள் முதல் என் கணவருக்கு ஒரு விலை உயர்ந்த பொருளை பரிசாக
அளிக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். என்ன கொடுப்பது என்று யோசித்து
யோசித்தே இதுவரை நான் அவருக்கு எந்த ஒரு பரிசுப் பொருளும் அளித்ததில்லை.
இந்தப் பிறந்த நாளில் என் கணவர் வெகு நாட்களாக பலரிடமும் கேட்டுக்
கொண்டிருக்கின்ற ஒரு விஷயத்தை அவருக்குப் பரிசாக அளிக்க வேண்டும் என்று
முடிவு செய்தேன்.
'கணவரை மயக்குவது எப்படி?' என்பதற்குத் திருமணமான நாள் முதல் என் உற்றார்
உறவினர் பலரும் பல்வேறு விதமாக அறிவுரை வழங்கி வந்தனர். அவர்கள் கூறிய
வாய்க்கு ருசியாக ஆக்கிப் போடுவது,  வீட்டில் அடங்கி நடப்பது
(கடினம்தான். ஆனாலும் முயற்சித்தேன்), எப்போதும் பளிச்சென்ற முகத்துடன்
இருப்பது, வேலை முடிந்து வீடு திரும்பும் கணவரை இன்முகத்துடன் வரவேற்பது
போன்ற அனைத்தையும் செய்து பார்த்தும், சீனிவாசன் மயங்குவதாகத்
தெரியவில்லை.
ஆனால் நான் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கப்போகிறேன் என்று
உட்கார்ந்தால் போதும். அவர் அடையும் ஆனந்தத்திற்கு அளவே இல்லை. ஆம்! அவர்
நான் நானாக இருப்பதையே விரும்புகிறார். என் பெற்றோருக்கு அடுத்தபடியாக
நான் படிப்பதைப் பார்த்து ஆனந்தப்படும் ஒரு நபராக என் கணவர்
விளங்குகிறார். ‘நான் படிக்கப் போகிறேன்’ என்று சொன்னால் போதும், எல்லா
வேலைகளையும் அவரே கூட செய்து முடித்து விடுவார் (என் தாய் போன்று).
இப்படிப்பட்ட கணவருக்கு எப்படி என்னால் சாதாரணமாக ஒரு கடையில் சென்று
பிறந்தநாள் பரிசை வாங்கி அளிக்க முடியும். ஆகவே அவர் ஆசைப்பட்ட திறந்த
மூல தமிழ் Spell checker-ன் முதற்படியான இந்த சந்திப் பிழை திருத்தியை
உருவாக்கினேன்.
இது என்னுடைய மூன்று நாட்கள் தொடர்ச்சியான உழைப்பினால் உருவானது. எந்தக்
கடையிலும் கிடைக்காதது. என்னைப் பொருத்தவரை இதுவே நான் அவருக்கு
அளிக்கின்ற முதல் விலை உயர்ந்த பரிசுப்பொருள்! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சீனிவாசன்! நலமுடன் நீடூடி வாழ்க!
சந்திப்பிழைத் திருத்தி உருவாக்கும் முறை - காணொளி - https://youtu.be/eC82S7wOr3E
இதில் இன்னும் நிறைய விதிகள் சேர்க்க வேண்டும். நிரலாளர்கள் மட்டுமே
பயன்படுத்தும் வகையில் உள்ளது.
தமிழின் எழுத்துக்களை எளிதில் கையாள, முத்து அண்ணாமலை அவர்கள் உருவாக்கிய
open-tamil பைதான் நிரல் பெரிதும் பயன்படுகிறது. அவருக்கும் open-tamil
குழுவினருக்கும் நன்றிகள்!
து. நித்யா,
பிப்ரவரி 18, 2018
Regards,
T.Shrinivasan
My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com
Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :
http://FreeTamilEbooks.com
Wikimedia-in-chn mailing list