2020 ல் முதல் கட்டற்ற தொழில்நுட்ப மாநாட்டை இணைய வழியில் நடத்தினோம்.
காணொளிகள் இங்கே - மாநாடு : [நாள் 1] **தொடக்க விழா** கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு | ஓம்தமிழ் - YouTube 1
இந்த வருடம் நேரடி நிகழ்வாக நடத்தலாம்.
ஆண்டுதோறும் செப்டம்பர் 17 ‘மென்பொருள் விடுதலை விழா’ https://www.softwarefreedomday.org/ என உலகெங்கும் கொண்டாடப் படுகிறது.
அதே நாளில் இந்த மாநாட்டை நடத்தலாம்.
மாநாட்டை ஒருங்கிணைக்க ஆர்வமுள்ளோர், இங்கு பதில் தருக.
மாநாட்டின் நிகழ்வுகள், உரைகள், பயிற்சிப் பட்டறைகள் நடத்த ஆர்வமுள்ளோரும் உங்கள் ஆர்வங்களை எழுதுக.
இணைந்து நடத்த விரும்பும் அமைப்புகள் சார்ந்தோரும் எழுதுக.