Hi Sibi,
Please translate this mail, otherwise we cannot understand.
Jayanta
2016-09-11 14:55 GMT+05:30 Sibi Kanagaraj <commonssibi(a)gmail.com>om>:
---------- Forwarded message ----------
From: "Sibi Kanagaraj" <commonssibi(a)gmail.com>
Date: Sep 8, 2016 8:01 PM
Subject: Fwd: [Karai-GLUG] இராமசாமி தமிழ்க் கல்லூரி - கட்டற்ற மின்னூலகம்
To: "Announcement and Discussion mailing list" <mailinglist(a)fsftn.org>rg>,
<
tamil(a)fsftn.org>
Cc:
---------- Forwarded message ----------
From: lenin gurusamy <guruleninn(a)gmail.com>
Date: 2016-09-03 22:16 GMT+05:30
Subject: [Karai-GLUG] இராமசாமி தமிழ்க் கல்லூரி - கட்டற்ற மின்னூலகம்
To: Karai(a)fsftn.org
நாம் ஏற்கனவே அழகப்பா பல்கலைக்கழகம் பொது நூலகத்தில் கட்டற்ற மின்னூலகம்
ஒன்றை ஏற்படுத்தினோம். அதை அறிந்த முனைவர். கீதா, உதவிப் பேராசியர்
இராமசாமி தமிழ்க் கல்லூரியில் இவ்வமைப்பை ஏற்படுத்த
எங்களை தொடர்பு
கொண்டார்.
இராமசாமி தமிழ்க்கல்லூரி பற்றி ( கல்லூரி ஆண்டு புத்தகத்திலிருந்து )
உலகம் போற்றும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குத் தொண்டாற்றும் எண்ணத்தில்
காரைக்குடியில் செந்தமிழ்ச்செல்வர் அமரர் இராம.பெரி. பெரியகருப்பன் அவர்களால்
26-01-1964-இல் இந்தியப் பல்தமிழ்க் கழகம் என்ற அமைப்பு தொடங்கப் பெற்றது.
இவ்வமைப்பு
18-06-1967 -இல் இராமசாமி தமிழ்க்கல்லூரி என்ற
பெயரில் தமிழக அரசின்
அங்கீகாரத்துடன் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தின் இணைவுக் கல்லூரியாக
நான்காண்டு தமிழ்ப்புலவர் பட்டயப் படிப்பைத் தொடங்கியது.
பின்னர் நடுவணரசின் பல்கலைக்கழக நிதி நல்கைக்
குழுவின் ஒப்புதலுடன்
கலைக்கல்லூரியாகத் தரம் உயர்த்தப் பெற்று மூன்றாண்டு பி.லிட், பட்டப் படிப்பை
1976 முதல் நடத்தி வருகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் இணைவுக்
கல்லூரியாக 2003-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 2016ஆம் ஆண்டில்
பல்கலைக் கழக நிதி நல்கைக்குழுவின் 12/B, 2F பதிவும் பெற்றுள்ளது.
எனவே நாங்கள் கீழ்க்கண்டவற்றை அங்கு அமைப்பது என்று முடிவு செய்தோம்.
விக்கிபீடியா - 70GB
தமிழ் விக்கிபீடியா - 1.5 GB
தமிழ் விக்சனரி - 200 MB
நாட்டுடமையாக்கப்பட்ட நூல்கள் 1500 + - 25GB
Freetamilebooks 250+ - 5GB
Project madurai 500+ - 900MB
நூலகத்தில் உள்ள கணினியில் குனு/லினக்ஸ் இயங்குதளத்துடன், kiwix, calibre
மென்பொருட்களை நிறுவினோம்.
நிறுவலின் போது முனைவர்.கீதா அவர்களுடன் உரையாட நேரம் கிடைத்தது.
அவர்களிடம் தமிழ் விக்கிபீடியா திட்டங்கள் பற்றியும் குறிப்பாக
தமிழ் விக்சனரி, விக்கிமூலம், Freetamilebooks,
மதுரை மின் இலக்கியத்
திட்டம் பற்றியும் அவர்களிடம் எடுத்துக் கூறினோம். இத்திட்டங்களைப் பற்றி
முன்பின் அறியாத அவர்கள்
மிகவும் ஆர்வமுடன் கேட்டறிந்தார். இம்முயற்சி
அங்குள்ள மாணவர்கள் மூலம்
மேற்கண்ட திட்டங்களுக்கு பங்களிக்க உதவும். வரும் வாரங்களில் அங்கு ஒரு
சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய உள்ளோம்.
_______________________________________________
Karai mailing list
Karai(a)fsftn.org
http://mailman.fsftn.org/mailman/listinfo/karai_fsftn.org
--
K.Sibi
Personal - Blog | Discuss | Twitter | Wiki | Git
FSFTN - Web | Discuss | Diaspora | Twitter
_______________________________________________
Wikimediaindia-l mailing list
Wikimediaindia-l(a)lists.wikimedia.org
To unsubscribe from the list / change mailing preferences visit
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikimediaindia-l