வணக்கம்,
இந்த APIக்கு ஒரு இடைமுகம் உருவாக்கப் பட்டுள்ளது. சாதாரணக் கைப்பேசியிலிருந்து கணினிவரை பல கருவிகளில் இந்த உரையாடியை இயக்கிப் பார்க்க முடியும். மேம்படுத்த விரும்புபவர்களும் இந்த API வழியாக மேம்படுத்திக் கொள்ளலாம்.
உரையாடி செயலி:  http://apps.neechalkaran.com/chatbot
விரிவான பதிவு: https://tech.neechalkaran.com/2022/02/blog-post.html
விளக்கக் காணொளி: https://www.youtube.com/watch?v=kQ71nE5OIaI
ஏபிஐ ஆவணம்: https://chatwiki.toolforge.org/


அன்புடன்,
நீச்சல்காரன்


On Sat, 5 Feb 2022 at 13:22, நீச்சல் காரன் <neechalkaran@gmail.com> wrote:
வணக்கம் 
கணினி மொழியியல்(Computational Linguistics) துறைக்குக் கிடைத்துள்ள புது வரவு விக்கித்தரவு(wikidata) என்று ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஓர் ஆய்வுக்கட்டுரை வந்தது.  அந்தக் கற்பனை இன்று chatwiki api மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. விக்கித்தரவை அடிப்படையாகக் கொண்டு தமிழ் உரையாடி(chatbot) உருவாக்க முடிகிறது. ஏதேனும் சிறிய கேள்வியினைக் கேட்டால் அது விக்கித்தரவிற்கேற்ப அடிச்சொல்லைப் புரிந்து கொண்டு  வினாவல் செய்து விடையைத் தமிழில் அளிக்கிறது.

உதாரணக் கேள்விகள்:
இந்தியாவின் தலைநகரம் எது?
இந்தியாவின் பரப்பளவு எவ்வளவு?
மு. க. ஸ்டாலினின் பிறந்த நாள் எது?
மு. கருணாநிதியின் தாய் யார்?
ஜெயலலிதாவின் பிறந்த நாள் என்று?
நரேந்திர மோடியின் பிறந்த நாள் என்று?
மதுரையின் மக்கள் தொகை எத்தனை?


நீங்களும் முயன்றும் பார்க்கலாம்:
https://chatwiki.toolforge.org/api?q=சிலப்பதிகாரத்தின் நூலாசிரியர் யார்?

இப்படி விக்கித்தரவில் தமிழில் பெயர் கொண்ட எந்த ஒரு தரவையும் இயல்பாகக் கேள்வியாகக் கேட்கமுடியும். விக்கித்தரவில் தமிழில் இல்லாத போதோ, தமிழ் இயல்மொழிப் பகுப்பாய்வில் புரிந்து கொள்ள முடியாதபோதோ பதிலளிக்காது. விக்கித்தரவில் தமிழ்ப் பெயர்களும் மேம்பட்ட தமிழ் இயல்மொழிப் பகுப்பாய்வுப் பொதியும் நல்ல இடைமுகமும் உருவாகும் நாளில் உலகின் மிகப் பெரிய தமிழறிவுச் சுரங்கம் கிடைக்கும்.


--
அன்புடன்,
நீச்சல்காரன்



--
அன்புடன்,
நீச்சல்காரன்