வணக்கம்,
விக்கிப்பீடிய உள்ளடக்கத்தில் உள்ள பாலின சமத்துவமின்மையைக் குறைக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் தெற்காசிய மொழிகளுக்கிடையே "விக்கி பெண்களை நேசிக்கிறது" என்ற பெயரில் கட்டுரைப் போட்டியினை விக்கிப்பீடியச் சமூக நடத்தி வருகிறது. கட்டுரைகளின் கருப்பொருள்கள் பாலின சமத்துவமின்மை, பெண்ணியம், பெண்களின் மேம்பாடு போன்ற கருப்பொருட்களின் அடிப்படையில் அமைகிறது. கருப்பொருள் மட்டுமே பெண்கள் தொடர்பானது கட்டுரையை யாவரும் எழுதலாம். இந்த ஆண்டு செப்டம்பர் ஒன்று முதல் முப்பது வரை இப்போட்டி நடைபெறுகிறது. எந்திர மொழிபெயர்ப்பு இல்லாமல் பதிப்புரிமை மீறல் இல்லாமல் முந்நூறு சொற்களில் யாரும் கட்டுரை எழுதி போட்டியில் பரிசும் பெறலாம்.

தற்போதுவரை வங்க மொழி முதலிடத்திலும் தமிழ் இரண்டாம் இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன. கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் தமிழ் இரண்டாமிடமே பெற முடிந்தது. ஆர்வமுள்ளவர்கள் கட்டுரை எழுதி இந்த ஆண்டு தமிழ் முதலிடம் பெற உடன் இணையலாம். மேலும் ஆர்வமுள்ள மாணவர்கள், எழுத்தாளர்களிடமும் பகிரலாம்.
 
போட்டி:
https://ta.wikipedia.org/s/acij
புள்ளிவிவரம்:
https://neechal.toolforge.org/wlwsa2021.html

image.png

--
அன்புடன்,
நீச்சல்காரன்