*இந்திய அளவில் மெய்ப்புப் போட்டி* என்று இந்திய மொழிகளுக்கிடையே விக்கிமூலம்
திட்டத்தில் போட்டி நடைபெற்று வருகின்றது. இணையத்தில் தமிழ் மின்னூல்களை
அதிகரிக்க முனையும் ஒரு தன்னார்வத் திட்டமே விக்கிமூலம். அதில் மூல நூலில்
உள்ளது உள்ளவாறுள்ளதா எனச் சரிபார்க்க வேண்டியதே பணி. பொதுவுரிமையில் உள்ள பல
நூல்கள் இங்கே பட்டியலாகிவுள்ளன. அதில் உங்கள் விருப்பமான நூலை எடுத்துப்
பங்களிக்கலாம். இணையத்தில் தமிழ் மொழிக்குப் பங்களிக்க விரும்புவர்களுக்கு இது
சரியான வாய்ப்பு.
https://meta.wikimedia.org/wiki/Indic_Wikisource_proofread-a-thon_November_…
புதியவர்களுக்குச் சிறிய அறிமுகம் இங்கே உள்ளது.
https://www.youtube.com/watch?v=4VfGuOxU0tY
ஆர்வமுள்ள கல்வி நிலையங்கள்/ஆர்வலர்களுக்குப் பயிற்சியும் அளிக்கிறார்கள்.
வாய்ப்புள்ளவர்கள் பங்களிக்கலாம் பரிசினை வெல்லலாம்.
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>