வணக்கம்,
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் பெண்ணியமும் நாட்டார் மரபும் குறித்தான சர்வதேச தொடர்தொகுப்புப் போட்டி இந்த ஆண்டு தமிழ் விக்கிப்பீடியாவிலும் நடந்து வருகிறது. விக்கிப்பீடியாவில் கலாச்சாரப் பன்முகத்தன்மையை அதிகரிக்கவும், பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதிகக் கட்டுரைகள் எழுதுபவர்களுக்குப் பரிசுகள் உண்டு.

போட்டிப் பக்கம்  https://ta.wikipedia.org/s/bndd

போட்டி தொடங்கி ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் 116 கட்டுரைகள் தமிழில் உருவாக்கப்பட்டுள்ளன. விக்கி சமூகங்களுக்கிடையே போட்டியில்லை என்றாலும் எழுதப்பட்ட கட்டுரைகளின் அடிப்படையில் உலகளவில் தமிழ்ச் சமூகம் இரண்டாமிடத்தில் உள்ளது. மேலும் புள்ளிவிவரங்களைக் காணலாம். நீங்களும் பங்கெடுக்கலாம்.

--
அன்புடன்,
நீச்சல்காரன்