காரைக்குடி குனு/லினக்ஸ் குழு
ஒலிபீடியா திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இத்திட்டத்தின் மூலம் தன்னார்வலர்களின் உதவியோடு தமிழ் விக்கிபீடியா கட்டுரைகள், அதன் பின்பு படிப்படியாக தமிழில் நாட்டுடமையாக்கப்பட்ட புத்தகங்களை ஒலி (Audio Book) வடிவில் உருவாக்குவது இதற்காக தனி இணையதளம் ஒன்று தொடங்க இருக்கிறோம். இந்த ஒலி புத்தகங்கள் பார்வையற்றவர்கள் / பார்வை குறைபாடுடையோருக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. நாம் அனைவருமே ஒலி புத்தகத்தைக் கேட்டுப் பயன்பெறலாம். Librevox.org என்ற இணையதளம் மூலம் ஏறக்குறைய ஆங்கிலத்தில் உள்ள ஏறக்குறைய ஆங்கிலத்தில் உள்ள அனைத்து இலக்கியங்களும் ஒலி வடிவில் மாற்றப்பட்டுவ்விட்டன. தமிழகத்ததில் அரசும், ஒரு சில தன்னார்வ அமைப்புகள் இதுபோன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளன. இருந்தாலும் தமிழில் ஒலிப்புத்தகங்கள் என்பது மிகக்குறைவே. சென்னை ஐஐடி மற்றும் எஸ்.எஸ்.என் கல்லூரி இணைந்து தயாரித்த உரை-ஒலி-மாற்றி (TTS-Text to Speech) கட்டற்ற மென்பொருள் மூலம் இத்திட்டத்தை தற்போது செயல்படுத்தி வருகிறோம். இத்திட்டத்தின் மூலம் வெளியாகும் அனைத்து ஒலிப்புத்தகங்களும் காப்புரிமை அல்லாத படைப்பாக்க பொது உரிமத்தின் (Creative Commons) கீழ் வெளியிடப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இத்திட்டத்திற்கு தங்களது ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்கவும்.
தற்போது 20 விக்கிபீடியா கட்டுரைகள் ஒலி வடிவில் மாற்றப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட தளத்தில் கேட்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும்.
Olipedia.org - Archive link
https://archive.org/details/@olipedia_orgOlipedia demo site
http://olipedia.surge.sh/
த.சீனிவாசன் எழுதிய python script மூலமும், ffmpeg மூலமும் இந்த ஒலிப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இணையதளத்தை வேலுச்சாமி உருவாக்கியுள்ளார்.