வணக்கம்,
இந்திய மொழிகளுக்கிடையே நடக்கும் விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. வெற்றி பெற்றுப் பரிசை அள்ளும் அணியில் நீங்களும் இடம் பெற வேங்கைத் திட்டப் போட்டியில் கட்டுரையை எழுதிப் பங்கெடுக்கலாம். மேலும் போட்டி விவரங்களுக்கு இங்கே பார்க்கலாம். அதன் பொருட்டு சென்னையில் விக்கிப்பீடியா தொடர்தொகுப்பு நிகழ்வு நடக்கவுள்ளது. அதாவது ஒரே இடத்தில் கூடி விக்கிப்பீடியாவில் எழுதுதல். இது தொடர்பாக உள்ள சந்தேகங்களைத் தீர்க்கவும், மற்றவர்களுடன் சேர்ந்து விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதவும் நீங்களும் கலந்து கொள்ளலாம்.

image.png

நாள்: நவம்பர் 10 2019 (ஞாயிறு)
நேரம் – காலை 10.00 – மாலை 5.00  (இதற்கிடையே வரலாம்)
இடம்:  பயிலகம்,
மென்பொருள் பயிற்சி நிறுவனம்,
7, விஜயா நகர் முதல் முதன்மை சாலை,
வேளச்சேரி, பூங்காவுக்கு எதிரில்
சென்னை 600042  

நிகழ்ச்சி நிரல்:
போட்டி அறிமுகம் 
போட்டி தொடர்பான வழிகாட்டால்
கொடுத்துள்ள தலைப்பில் கட்டுரை உருவாக்கம்


கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு 
தமிழ்க் களஞ்சியத்தை வெற்றி பெற வைக்கவேண்டுமா?
இப்போதே முன்பதிவு செய்யுங்கள். https://forms.gle/RyAg2S5TmxC4ZfPW8


புள்ளிவிவரம்: https://tools.wmflabs.org/neechal/tigerarticle.html

--
அன்புடன்,
நீச்சல்காரன்