சீனிவாசன் என்றால் சீனிச்சர்க்கரையில் வாசம் செய்யும் எறும்பு.
உழைப்பில் விஞ்சும் எறும்பு போல, தமிழ்ச் சர்க்கரை மலைக்கு உதவும்
நண்பர் த. சீனிவாசன் வாழ்க!

தமிழெனும் சர்க்கரைச் சீனிவா சன்சீர்
அமிழ்தென வாழி அமைந்து.


நா. கணேசன்

Virus-free. www.avg.com

On Fri, Jan 29, 2021 at 7:41 AM N. Ganesan <naa.ganesan@gmail.com> wrote:
வாழ்த்துகள், சீனிவாசன்! தக்கோருக்கான பரிசில்.
நண்பர்களிடமும் கூறுகிறேன். உதவுவார்கள் என நம்பிக்கை.

அரசாங்கம் செய்ய வேண்டிய பணி, விக்கிஸோர்ஸ் போன்றவற்றுக்கு நிதி அளிப்பது. ஒரு
நிதிநல்கை ஆவணம் எழுதி உங்கள் குழு முயலவேண்டும். நிச்சயம் கிடைக்கும். 
பேரா. வா. செ. குழந்தைசாமி போன்றோர் இருந்திருந்தால் பரிந்துரைப்பேன். இப்போதும்
செய்யலாம். 

ஹூஸ்டன் தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கு ரூ. 14 கோடி நிதி திரட்டலில் இருக்கிறோம்.
பெரும்பணம் கொடுத்துள்ளேன். நண்பர்களிடமும் முயன்றுவருகிறோம். இடையில்
கொரானா வேறு. ஒரு கோடி ரூபாய் ஆண்டுக்கு சம்பளம் டெக்சாஸ் அரசாங்கம் கொடுக்க
சம்மதித்துள்ளது. ஹூஸ்டன் பல்கலை தமிழ்ப்பீடம்  ஏற்பட்டபின் இதற்கு வரலாம். 
பெர்க்கிலி, ஹார்வர்ட், ஹூஸ்டன், டொராண்டோ, லண்டன், .... என
தமிழ், திராவிடவியல் பீடங்கள் நிறுவப்படும்போது நடுநிலையில் தொன்மையான
தமிழர் வரலாற்றினை பாரத உபகண்டத்தில் ஆராய உலகம்ழுதும் அறிஞர்களுக்கு
பதவிகள் கிட்டும். உ-ம்: கிண்ணிமங்கலம், கி. பி. 2ம் நூற்றாண்டு தமிழ்ப் புள்ளிகளுடன்
ஏற்பட்ட பள்ளிப்படை இலிங்கம், அதன் வரலாறு. இலிங்கத்தின் தலை காணாமல் போய்விட்டது:

விக்கிஸோர்ஸ் ஓர் அதிசயமான திட்டம். வாழ்க! இப்போதெல்லாம் திறன்பேசிகளில்
கேம்ஸ்கானர் போன்ற பிடிஃப் ஆவணம் ஆக்கும் நிரலிகள் நிறைய வந்துவிட்டன.
தமிழ் இளைஞர்களுக்கு பயிலரங்குகள், யுட்யூப் காணொளிகள் செய்தல் வேண்டும்.
பேரூர் தமிழ் கல்லூரி, ஆதீனம், சிரவை ஆதீனம், கொங்குநாடு கல்லூரி, கற்பகம்,
நகம கல்லூரி (பொள்ளாச்சி), இணையப் பல்கலை, ... போன்றவற்றில் நடத்த ஏற்பாடு 
செய்யலாம்.

3-4 லக்ஷம் தமிழ் புத்தகங்கள் ஒருங்கு குறியீட்டில் விக்கிசோர்ஸ் போன்ற திட்டங்களால்
வருவதன் மூலம் தமிழ், திராவிடாலஜி ஆய்வுகள் மேம்படும் என்பதில் ஐயமில்லை.
அரசை நிதி உதவ வலியுறுத்துவோம். யூனிகோட் ஆக்கத்திற்குத் தமிழ் வளர்ச்சித்
துறை உதவச் செய்வோம். பழைய தமிழ், வரலாறு துறைகளின் பேராசிரியர்கள்
நூல்கள் இடம்பெறச் செய்தலுக்கு தமிழ்நாடு, மலாயா, சிங்கப்பூர், இலங்கை, கனடா,
இங்கிலாந்து, அமெரிக்கா, ... என எல்லா நாட்டு அரசுகளுக்கும் பொறுப்பு உள்ளது.
‘கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா!’ என்றார் புரட்சிக்கவி.
படிப்பார் இன்றி அழியும் தறுவாயில், 1850 - 1980 வரையில் வந்த நூல்கள்,
ஆய்வேடுகள், இதழிகைகள், ... கிடக்கின்றன. முடிந்தவரை காப்போம்.
அவற்றுக்கெல்லாம் யூனிகோட் ஆக்கம் ஒன்றே நிரந்தர வாழ்வை அளிக்கவல்லது.

செம்மொழி என்றால், மரபணு கொண்டார் மாத்திரம் அல்ல, அயலவர் - த்ராவிட பாஷைகளை
தாய்மொழி என அமையாதார் பயிலவேண்டும். ஸம்ஸ்கிருதத்தைப் பாருங்கள், நூற்றுக்கணக்கான
ஆய்வாளர்கள் உலக முழுதிலும் இருந்து 200 ஆண்டுக் காலமாகப் பயின்று அதன் பெருமைகளை
வெளிப்படுத்தி வருகின்றனர். அவ்வாறு உலகின் சிறந்த பல்கலைப் பேராசிரியன்மார்
ஏற்கும் அளவினதாகத் தமிழ்/த்ராவிட ஆய்வுகள் அமைதல் வேண்டும். உ-ம்:

வாழ்க தமிழ் வளர்க்கும் தங்கள் குழுப்பணி. பிற இடங்களிலும் எழுதுகிறேன்.

அன்புடன்,
நா. கணேசன்

On Thu, Jan 28, 2021 at 10:19 AM Shrinivasan T <tshrinivasan@gmail.com> wrote:


வணக்கம்,

சமீபத்தில் "Shuttleworth Flash Grant" என்ற நல்கைத் திட்டத்தில் 5000 அமெரிக்க டாலர்கள் நல்கைத் தொகை பெற்றேன் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.

நாம் பார்த்தே இராத பலரும் நமது பணிகளைக் கண்டு, அவற்றை ஊக்க்கப்படுத்தும் வகையில், பரப்புரை செய்வதும், பங்களிப்பதும், நன்கொடை அளிப்பதும், நல்கைகள் அளிப்பதும் பெருமகிழ்ச்சி தருபவை. கணியம் அறக்கட்டளையின் பணிகள் அவ்வாறே பலரையும் சென்றடைந்து, பல்வேறு பங்களிப்பும்கள், நன்கொடைகளை பெற்று வருகின்றன.

Shuttleworth Foundation ஆனது சனவரி 2001 ல் தென்னாப்பிரிக்க தொழில் முனைவர் 'மார்க் ஷட்டில்வொர்த்' என்பவரால் தொடங்கப்பட்டது. மனித சமுதாய வளர்ச்சிக்கு உழைப்பவர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு சமூக ஆய்வுகளை செய்து வருகிறது. இவரே உபுண்டு லினக்சு மற்றும் அதற்கு பங்களிக்கும் 'கெனானிகல்' நிறுவனம் இரண்டையும் தொடங்கி நடத்தி வருபவர்.

சமூகத்திலும் மக்கள் வாழ்விலும் மாற்றங்களை உருவாக்குபவர்கள், தம் பணிகளை செவ்வனே செய்ய, ஷட்டில்வொர்த் அறக்கட்டளை பல்வேறு நல்கைகளைத் தருகிறது. மேலும் விவரங்களுக்கு அவர்களது வலைத்தளம் காண்க. https://shuttleworthfoundation.org

"Shuttleworth Flash Grant" என்பது அவர்கள் வழங்கும் ஒரு நல்கை. இதன் மூலம் 5000 அமெரிக்க டாலர்கள் தருகின்றனர். 3.60 இலட்சம் இந்திய ரூபாய்கள். ஏற்கெனவே நல்கை பெற்ற ஒருவர் செய்யும் பரிந்துரை மீது ஆய்வு செய்து, பின் இந்த நல்கை வழங்குகின்றனர். இத்தொகையை நாம் விரும்பும் எந்த நற்செயலுக்கும் பயன்படுத்தலாம். என்ன செய்தோம் என்று அறிக்கை எழுத வேண்டும். இதுவரை இந்த நல்கை பெற்றோர் விவரங்கள் இங்கே - https://shuttleworthfoundation.org/fellows/flash-grants/

Coko Foundation - கோகோ அறக்கட்டளையின் நிறுவனர் ஆதம் ஹைட் (Adam Hyde) அவர்கள் எனக்கு இந்த நல்கையை பரிந்துரை செய்தார். கோகோ அறக்கட்டளை குழுவினர் பதிப்பக உலகிற்குத் கட்டற்ற மென்பொருட்களை உருவாக்கி வருகின்றனர். நல்கைக்கு பல்லாயிரம் நன்றிகள் ஆதம்.

https://coko.foundation/wp-content/uploads/2019/08/color.svg_.png
https://coko.foundation/wp-content/uploads/2017/11/0E7A0538.md_bwsq.jpg ஆதம் ஹைட் (Adam Hyde)[/caption]

நல்கைத் தொகை முழுதும் கணியம் அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க உள்ளேன். வரி விலக்கு தரும் 80 ஜி அனுமதிக்காக காத்திருக்கிறோம். அனுமதி கிடைத்த பின் கணியம் கணக்கிற்கு அனுப்புவேன். FreeTamilEbooks.com , தமிழ் விக்கி மூலம் ஆகிய திட்டங்களுக்கு இத்தொகையை பயன்படுத்துவோம். இவை சார்ந்த நிகழ்ச்சிகள், நிரல் திருவிழாக்கள், பயிற்சிப் பட்டறைகள் நடத்த உள்ளோம். செலவு அறிக்கையை 6-12 மாதங்களில் பகிர்வோம்.

ஷட்டில்வொர்த் அறக்கட்டளையின் ஜேசன், அச்சல், கோகோ அறக்கட்டளை நண்பர்கள், ஆதம், கணியம் அறக்கட்டளை பங்களிப்பாளர்கள், கட்டற்ற மென்பொருட்கள் பங்க்களிப்பாளர்கள் ஆகியோருக்கு எனது நன்றிகள். இணைந்து சிறந்த உலகை உருவாக்குவோம்.

த. சீனிவாசன்



--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/vallamai/CAND2796H1ucpf%3DpJ72VENj2KN-8r46aD2O9kJt_biSkS0QphJw%40mail.gmail.com.

Virus-free. www.avg.com