வணக்கம்,சரியாக 2021 ஆண்டின் முதல் நாள் தனியொருவராக விக்கிப்பீடியாவில் 5000 தமிழ்க் கட்டுரைகளை எழுதி சாதனை செய்த திரு. கி.மூர்த்தி குறித்த செய்தியினைப் பகிர்ந்திருந்தேன். இப்போது ஒரே ஆண்டில் 6000 கட்டுரைகளைக் கடந்து, புதிய சாதனை செய்துள்ளார்.
இது குறித்த செய்திக் கட்டுரை ஏபிபி நாடு தளத்தில் வந்துள்ளது.
தமிழ் விக்கிப்பீடியா என்பது இவரைப் போன்ற பலரின் கூட்டுழைப்பு. இணையத்தில் ஆக்கப்பூர்வமாகச் செலவிட விக்கித் திட்டங்களில் செலவிடலாம் என்பதற்குச் சிறந்த உதாரணமாக உள்ளார். அவரது பேச்சுப் பக்கம்:
https://ta.wikipedia.org/s/30pc