தமிழ் இணையக் கல்விக்கழகம் சென்ற ஆண்டு, தமிழ் ஆய்வுகளுக்கான சொல்திருத்தி உள்ளிட்ட 10 மென்பொருட்களை வெளியிட்டது.

இவை மூலநிரல்களுடன் வெளிவர பலரும் ஆவலாகக் காத்திருந்தோம்.

இன்று அவற்றுகான மூல நிரல்களை வெளியிட்டுள்ளதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

அரசின் (மக்களின்) பொருட்செலவில் உருவாகும் மென்பொருட்கள், ஆய்வுகள் யாவும் மூலநிரலுடன், கட்டற்ற மென்பொருட்களாக வெளிவரும் போது தான், பலரும் அவற்றை பல்வேறு வகைகளில் வளர்த்தெடுக்கவும் கற்று பல புத்தாக்கங்கள் உருவாக்கவும் இயலும்.

அந்த வகையில் தமிழ் இணையக் கல்விக்கழகம் வெளியிட்டுள்ள 'சொற்திருத்தி' உள்ளிட்ட அனைத்து மென்பொருட்களின் மூலநிரல்கள் தமிழ்க்கணிமை ஆர்வலர்களுக்கு பெருமகிழ்ச்சி தருகின்றன.

இந்த அரிய, இனிய செயலுக்கு ஆதரவு அளித்து, செயலாக்கிய, த.இ.க குழுவினர் அனைவருக்கும், தமிழக அரசுக்கும் பல்லாயிரம் நன்றிகள்.

த.சீனிவாசன்





தமிழ்ச் சமுதாயம் மற்றும் தமிழ்க் கணினி ஆராய்ச்சியாளருக்கும் பயன்படுவதற்காக தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் மென்பொருள்களை உருவாக்கும் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு, அரசாணை எண் (2D) 26, நாள் 15.10.2015 மூலம் தமிழ்நாடு புதுமை முயற்சிகள் (Tamilnadu Innovative Initiatives scheme)  திட்டத்தின்கீழ் 2015ஆம் ஆண்டிற்காக ரூ. 1.5 கோடி தொகை வழங்கியுள்ளது. இந்நிதி உதவியுடன் 15 மென்பொருள் உருவாக்கும் திட்டங்கள் கண்டறியப்பட்டு திட்டச் செயலாக்கம் நடைபெற்று வருகின்றது.

அதில் தமிழிணையம் ஒருங்குறிமாற்றி மற்றும் தமிழிணையம் ஒருங்குறி  எழுத்துருக்கள் என்ற  2 திட்டங்கள் முடிவுற்று       அத்திட்டங்களை  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் 23.05.2017 அன்று தொடங்கி வைத்தார்.  தற்போது கீழ்க்கண்ட 10 திட்டங்கள் முடிவுற்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

  1. தமிழிணையம் – சொல் பேசி பதிவிறக்க (.Zip வடிவம்) – மென்பொருள் மூல வடிவம் பதிவிறக்க (.Zip வடிவம்)
  2. தமிழிணையம் – விவசாயத் தகவி http://speech.ssn.edu.in/ agri_home/ welcome.html – மென்பொருள் மூல வடிவம் பதிவிறக்க (.Zip வடிவம்)
  3. தமிழிணையம் – தொல்காப்பியத் தகவல் பெறுவி பதிவிறக்க (.Zip வடிவம்) – மென்பொருள் மூல வடிவம் பதிவிறக்க (.Zip வடிவம்)
  4. தமிழிணையம் – தமிழ்ப் பயிற்றுவி பதிவிறக்க (.Zip வடிவம்) – மென்பொருள் மூல வடிவம் பதிவிறக்க (.Zip வடிவம்)
  5. தமிழிணையம் – நிகழாய்வி http://78.46.86.133:8080/tvademo/     http://78.46.86.133/TVA.apk – மென்பொருள் மூல வடிவம் பதிவிறக்க (.Zip வடிவம்)
  6. தமிழிணையம் – பிழைதிருத்தி பதிவிறக்க (.Zip வடிவம்) – மென்பொருள் மூல வடிவம் பதிவிறக்க (.Zip வடிவம்)
  7. தமிழிணையம் – அகராதி தொகுப்பி பதிவிறக்க (.Zip வடிவம்) – மென்பொருள் மூல வடிவம்பதிவிறக்க (.Zip வடிவம்)
  8. தமிழிணையம் – கருத்துக்களவு ஆய்வி http://karuthukalavu.palkalai.com/ – மென்பொருள் மூல வடிவம் பதிவிறக்க (.Zip வடிவம்)
  9. தமிழிணையம் – சொற்றொடர் தொகுப்பி பதிவிறக்க (.Zip வடிவம்)
  10. தமிழிணையம் – தரவு பகுப்பாய்வி பதிவிறக்க (.Zip வடிவம்) – மென்பொருள் மூல வடிவம் பதிவிறக்க


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com


--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com