வணக்கம்,
தமிழின் முக்கிய சொற்களஞ்சியமான சொற்குவைத் தளத்தின் சொற்களின் ஒரு பகுதி
சுமார் 4.4 லட்சம் ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தற்போது
தமிழ் விக்சனரிக்குக் கொடையாக அளித்துள்ளனர். இவை விரைவில் விக்சனரியில்
ஏற்றப்படவுள்ளது.
https://sorkuvai.com/disclaimer/wordsforwiktionary/
சில மாதங்களுக்கு முன்னர் சொற்குவைத் தளம் பொதுவுரிமையில் வெளியிடப்பட்டது
குறிப்பிடத் தக்கது. தமிழ் விக்சனரி உட்பட பல்வேறு தரவகங்களுக்கு இச்சொற்களை
இனி நாம் எளிதில் கொண்டு சேர்க்கலாம். தமிழ் வளர்ச்சித் துறை மற்றும்
அகரமுதலித் திட்ட இயக்கத்திற்கும் நன்றி.
--
அன்புடன்,
நீச்சல்காரன்
neechalkaran.com <http://www.neechalkaran.com/p/author.html>