Spell4Wiki என்பது விக்கிமீடியா பொதுவகத்தில் விக்சனரி சொற்களுக்கான ஒலிப்புக்கோப்புகளை பதிவுசெய்து பதிவேற்ற பயன்படும் ஒரு மொபைல் செயலி ஆகும். இது ஒரு விக்கி-அகராதியாகவும் செயல்படுகிறது(விக்சனரியிலிருந்து சொல்லுக்கான பொருளை அளிக்கும்).

கணியம் மற்றும் விழுப்புரம் கட்டற்ற மென்பொருள் குழுமம் சார்பாக சில மாதங்களுக்கு முன்பு இச்செயலி வெளியிடப்பட்டது அச்சமயத்தில் Spell4Wiktionary விருப்பத்தில் தமிழ் மொழி மட்டுமே இடம்பெற்றிருந்தது. மேலும் நாம் அதில் மற்ற மொழிகளை இணைப்பதற்கான வழிமுறைகளை அளித்து இருந்தோம். அதன்மூலம் சில விக்கிப்பீடியர்கள் தங்கள் மொழிகளை இணைப்பதற்கான கோரிக்கையை எழுப்பினர் அதன் அடிப்படையில் தற்போது மேலும் ஐந்து மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஜெர்மன்(German), பெங்காலி(Bengali), ரஷ்ய(Russian) மற்றும் ஸ்வீடிஷ்(Swedish) மொழிகள் Spell4Wiktionary விருப்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது தற்போது அம்மொழி மக்கள் விக்சனரியில் உள்ள வார்த்தைகளுக்கு எளிமையான முறையில் ஒலிப்புக்கோப்பினை பங்களிக்க முடியும். மேலும் தாக்பானி(Dagbani) மொழியினை புதிதாக இணைத்துள்ளோம் தற்போது Dagbani-மொழியில் விக்சனரி பக்கம் இல்லை இருப்பினும் அவர்களால் Spell4WordList மற்றும் Spell4Word விருப்பங்கள் மூலம் பங்களிக்க முடியும் என்பது மேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி.

செயலியின் பல குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. விக்சனரி தமிழ் தூதரகத்தில் புதிய கோரிக்கை குறித்த தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது https://ta.wiktionary.org/s/4ojr

 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து மாற்றங்களும் தற்போதைய புதிய பதிப்பில்(v1.1) உள்ளது.

செயலி இணைப்பு(Play store link): https://play.google.com/store/apps/details?id=com.manimarank.spell4wiki

புதிய மொழிகளை சேர்ப்பதற்கும் செயலி குறித்த குறைபாடுகளை தெரிவித்ததற்கும் கீழே உள்ள அனைவருக்கும் நன்றிகள் பல.

ZI_Jony, Info-former, Jan Ainali, Ganesh, Masssly, andrew.krizhanovsky & Infovarius

 
image.png

 

உங்கள் மொழியையும் சேர்க்க விரும்புகிறீர்களா?

பார்க்க : https://github.com/manimaran96/Spell4Wiki/blob/master/docs/CONTRIBUTING.md#add-your-wiktionary-language-into-spell4wiki

 

ஏற்கனவே உள்ள மொழிகளின் விவரங்கள் - Form responses & Github issues

image.png

 

மூல நிரல் : https://github.com/manimaran96/Spell4Wiki

 

கூடுதல் தகவல்கள் :

- https://commons.wikimedia.org/wiki/Commons:Spell4Wiki

- https://manimaran96.wordpress.com/category/android-apps/spell4wiki/

- https://github.com/manimaran96/Spell4Wiki/blob/master/docs/CONTRIBUTING.md

 

--
Regards,
T.Shrinivasan


My Life with GNU/Linux : http://goinggnu.wordpress.com
Free E-Magazine on Free Open Source Software in Tamil : http://kaniyam.com

Get Free Tamil Ebooks for Android, iOS, Kindle, Computer :     http://FreeTamilEbooks.com